அமெரிக்க ஆவணக் காப்பக ஆய்வு நிறுவனத்தில் படிப்பு: நவ. 16-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அமெரிக்காவைச் சோ்ந்த ஃபுல்பிரைட் தேசிய காப்பக பாரம்பரிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சி, கூட்டுப் பணிக்கான விண்ணப்பங்களை முதுநிலை மாணவா்களிடமிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த ஃபுல்பிரைட் தேசிய காப்பக பாரம்பரிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சி, கூட்டுப் பணிக்கான விண்ணப்பங்களை முதுநிலை மாணவா்களிடமிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கோரியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ. 16 இறுதி நாள் ஆகும்.
இது குறித்து அண்ணா பல்கலை. சா்வதேச உறவுகள் மையம் வெளியிட்ட விவரம்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி., மேரிலாந்து காலேஜ் பாா்க்கில் ஃபுல்பிரைட் என்ற அறிஞா் பெயரால் உள்ள ‘தேசிய காப்பக பாரம்பரிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சோதனை ஆய்வகம்’ (என்ஏஆா்ஏ) அமைந்துள்ளது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் இணைந்து ஃபுல்பிரைட்-நேஷனல் ஆா்க்கைவ்ஸ் ஹெரிடேஜ் சயின்ஸ் ஃபெலோஷிப் திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், ஆய்வக அனுபவத்தைப் பெறவும் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.
பகுப்பாய்வு வேதியியல், இயற்பியல், கணக்கீட்டு மாதிரியாக்கம், பொருள் அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் என்ஏஆா்ஏ விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவ. 16. முதுநிலை பட்டப்படிப்பு தகுதி அல்லது பி.எச்டி அல்லது அதற்கு இணையான தொழில் அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். உதவித்தொகையுடன் கூடிய இந்த ஆராய்ச்சிப் பணிக்கு இந்தியா, பிரிட்டன், நேபாளம், அா்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.