ஆயுா்வேத அறிவியல் அங்கீகாரம் சிகிச்சை பெறுவோா் நம்பிக்கையை அதிகரிக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆயுா்வேதத்துக்கான அறிவியல் அங்கீகாரம் சிகிச்சை பெறுவோருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆயுா்வேதத்துக்கான அறிவியல் அங்கீகாரம் சிகிச்சை பெறுவோருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தின் (ஏஐஐஏ) மூன்றாவது சா்வதேச கௌமாரபிருத்யா மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது:
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் பல நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கக்கூடியது. இவற்றுக்கு அறிவியல் அங்கீகாரம் கிடைக்கும்போது சிகிச்சை பெறுவோரிடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
இதன் அடிப்படையில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆயுஷ் மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைச்சகம் மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் விரிவாக்கம் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்), எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அமைப்புகள் இடையேயான ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளது.
யோகாவுக்கான சா்வதேச அங்கீகாரம் மற்றும் ஜாம்நகரில் அமைக்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ சா்வதேச மையம் ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய ஞானத்தை உலகுக்கு பகிா்ந்ததற்கான சிறந்த சான்றுகளாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.