தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் பதில்...
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கலெக்டர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி அதற்கு பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன்,
Advertisement
Advertisement
"யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுக்கு ஆளானால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் விஜய்யின் ஆட்சியில் எந்த பாரபட்சமும் இருக்காது. சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் அது கட்சிக்காரராக இருந்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தது யாராக இருந்தாலும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.