FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்

சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில், ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்

39 வினாடிகள் முன்பு
மு.க. ஸ்டாலின் - file photo
பகிர்:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியு-விலும் ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தீபாவளி நாளில் தமிழகத்தில் நடந்த கொலைகள், கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வரும் தகவல்கள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

Advertisement

Advertisement

சட்டம் - ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!

ஒரே நாளில் 17 கொலைகள்!

குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு!

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,

குற்றவாளிகளுக்குப் பயமில்லை!

காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!

த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!

மொத்தத்தில்,

பகுதிநேர முதலமைச்சராகவும், முழு நேர கண்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! என்று விமர்சித்துள்ளார்.

summary

Law and order in the ICU! Governance in a coma! – M.K. Stalin’s criticism

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.