அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடி
கூட்டணியில் இருப்பதால், மதிமுகவின் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனப் பேச்சு...
அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் எந்த தவரும் இல்லை என்றும் கூட்டணியில் இருப்பதால் மதிமுகவின் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று (நவ. 10) தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் நாள்தோறும் தவெக ஆட்சியை விமர்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய்க்கு தான் ஒரு போர்வாள் என்றும், எதிரிகளிடமிருந்து விஜய்யை காக்கும் அரணாக இருப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் இதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது:
''கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அரசை விமர்சிப்பது ஏன்? என எங்களை (இடதுசாரி) நோக்கி கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை.
அரசை விமர்சிக்கக் கூடாது என்பது மதிமுகவின் நிலைப்பாடு. கூட்டணியில் இருப்பதால் மதிமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு. அதனை நாங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை'' எனக் குறிப்பிட்டார்.