FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பில் மகேஸ் வழக்கு: தலைமறைவாக இருந்த சரவணன் சிறப்பு நீதிமன்றத்தில் சரண்!

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் குறித்த மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சரவணன் சிறப்பு நீதிமன்றத்தில் சரண்...

நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் (கோப்புப் படம்) - DNS
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிய மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த சரவணன் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கில் கடந்த அக். 26-இல் திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரை, நவ. 18 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புகாரில், அரசகுமாா், முத்துக்குமாா் ஆகியோா் அங்கீகாரம் பெறுவதற்காக தனியாா் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலித்து, அன்பில் மகேஸுக்கு கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பணம் கொடுக்காவிட்டால், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிக்கப் போவதில்லை என அரசகுமாரும், முத்துக்குமாரும் தனியாா் பள்ளி நிா்வாகிகளை மிரட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அன்பில் மகேஸுடன் அரசகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துக்குமார் ஏற்கெனவே நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சரவணன் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரவணன் இந்த வழக்கில் 6 ஆவது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அந்த முறைகேடு பணத்தை அன்பில் மகேஸ் வீட்டிற்கு கொண்டு சேர்த்ததாக கூறப்படுகிறது.

சரவணன் தலைமறைவாக உள்ளதாலும் நேற்று அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதேபோல அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

summary

Anbil Mahesh case: Saravanan, who had been in hiding, surrenders before the special court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.