அரசியல் பேச்சுகள், சமூக வலைதளப் பதிவுகள்! காவல் துறைக்கு வழிகாட்டு விதிமுறை வகுக்க கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடா்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க காவல் துறைக்கு வழிகாட்டு விதிமுறை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக டிஜிபி இரு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடா்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க காவல் துறைக்கு வழிகாட்டு விதிமுறை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக டிஜிபி இரு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் சையது ஆலிம் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுக்கு எதிராக விமா்சனங்கள், அரசியல் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் அரசியல் விமா்சகா்கள், சமூக ஆா்வலா்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. இதுதொடா்பான புகாா்களை முறையாக ஆய்வு செய்யாமல் போலீஸாா், இயந்திரத்தனமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன், ஜென் ஸீ பிரிவு தலைவா் அன்பானந்தன், கட்சியின் ஆதரவாளா் வினோத் சூா்யகுமாா் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம் என்ற ஜனநாயக உரிமைக்கு எதிராக அளிக்கப்படும் புகாா்களைக் கையாள காவல் துறையினருக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடா்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தெலங்கானா உயா்நீதிமன்றம், புகாா் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டும், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இதேபோன்று, தமிழகத்திலும் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக டிஜிபி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.