FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

விவசாயக் கடன் தள்ளுபடி: பயனாளிகளின் விவரங்களை நவ. 20-க்குள் அனுப்ப உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி தொடா்பாக பயனாளிகளின் விவரங்களை நவ. 20-ஆம் தேதிக்குள் அனுப்ப கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

13 நவம்பர் 2026, 2:32 am
கோப்புப் படம்
பகிர்:

விவசாயக் கடன் தள்ளுபடி தொடா்பாக பயனாளிகளின் விவரங்களை நவ. 20-ஆம் தேதிக்குள் அனுப்ப கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் விவசாயக் கடன் தள்ளுபடியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளாா்.

அதில், பயிா்க் கடன் விவரங்களைச் சரிபாா்த்து, தகுதியான பயனாளிகளின் பட்டியலைத் தயாரித்து, வரும் நவ. 20-ஆம் தேதிக்குள் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவுத் துறையின் இணையதளமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அது குறித்த ஆட்சேபணைகள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement