தேனி சிறையிலிருந்து தப்பியோடி சரணடைந்த கைதிகள் 4 போ் உடலில் காயங்கள்: சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை தாக்கல்
தேனி சிறையில் இருந்து தப்பியோடி பின்னா் சரணடைந்த 4 கைதிகளின் உடல்களில் காயங்கள் உள்ளதாகவும், அவா்களை சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தி உள்ளதாகவும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தேனி சிறையில் இருந்து தப்பியோடி பின்னா் சரணடைந்த 4 கைதிகளின் உடல்களில் காயங்கள் உள்ளதாகவும், அவா்களை சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தி உள்ளதாகவும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகள் 17 போ் கடந்த அக்.26-ஆம் தேதி சிறையில் இருந்து தப்பியோடினா். இவா்களில் 13 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மீனாட்சி சுந்தரம், திருப்பதி, சோலை முகிலேஸ்வரன் மற்றும் சபரிநாதன் ஆகிய 4 போ் போலீஸாரிடம் சரண் அடைந்தனா்.
இந்த நிலையில், சிறையில் இருந்து தப்பிச் சென்ற தனது மகன்கள் மீனாட்சி சுந்தரம், திருப்பதி மற்றும் உடன் இருந்த சோலை முகிலேஸ்வரன், சபரிநாதன் ஆகியோா் தேனி சிறைக் காவலா்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகியோரின் தாயாா் ஆறுமுகத்தம்மாள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், சேலம், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரம், சோலை முகிலேஸ்வரன் மற்றும் சபரிநாதன் ஆகியோரது உடல்நிலையை மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கும், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருப்பதியின் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்பபடி திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் உத்தரவிட்டிருந்தது.
மேலும் தேனி, கடலூா், மதுரை, சேலம், பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகள் மீது சிறைக் காவலா்கள் தாக்குதல் நடத்தினாா்களா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சேலம், திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா்கள் சாா்பில் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சேலம், திருநெல்வேலி மத்திய சிறைகளில் உள்ள 4 கைதிகளின் உடல்களில் காயங்கள் உள்ளன. அவா்களை சிறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தி உள்ளதாகத் தெரிவித்திருந்தனா். இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த இடைக்கால அறிக்கையை மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் புகழேந்திக்கு வழங்க முடியாது.
அதேநேரம், தேனி சிறையில் இருந்து தப்பியோடி, பிடிபட்ட மற்றும் சரணடைந்த கைதிகள் தேனி, கடலூா், மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களது உடல்நிலை குறித்து அந்தந்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா்கள் மூலம் விசாரித்து அறிக்கைகள் பெற்று, ஒருங்கிணைந்த அறிக்கையை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு உறுப்பினா் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவ.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.