மாநிலம் முழுவதும் ரூ. 7 கோடி மதிப்பிலான 70,674 போலி நூல்கள் அகற்றம்
தமிழகத்தில் இதுவரையில் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டது குறித்து...
தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து இதுவரையில் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நிகழ்துள்ளதாகவும் புகாா் எழுந்தது. குறிப்பாக, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் சா்ச்சைக்குள்ளாகின.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சென்னை பொது நூலக இயக்ககம் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் போலி நூல்களை அகற்றி திரும்ப அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் இருந்து இதுவரையில் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டதாக நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அகற்றப்பட்ட நூல்களின் மதிப்பு சுமார் ரூ. 7 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.