தென்காசி மாவட்ட நூலகத்திலும் 2,200 போலி நூல்கள் அகற்றம்!
தென்காசி மாவட்ட நூலகத்திலும் அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளது பற்றி...
தென்காசி மாவட்ட நூலகத்தில் அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் 2,200 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தில் 1,500 -க்கும் மேற்பட்ட போலி நூல்கள் இருந்ததாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் பெயர்களில் போலி நூல்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்து இதுதொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் பல்வேறு நூலகங்களிலும் மேற்குறிப்பிட்ட பதிப்பக நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் நூல்கள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் சுமார் 2,200 நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷா தனுஷ், சூர்யா அனுஷ்கா. அஞ்சலி சூர்யா உள்ளிட்ட பெயர்களில் வெளியான அகல் விளக்கு பதிப்பக புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.