தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!
தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக நூலகத் துறை அதிகாரிகள் தகவல்...
தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக நூலகத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டு சமீபத்தில் முதல்வர் விஜய்யால் திறக்கப்பட்ட கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் போலி நூலகள் இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிக்கொண்டு வந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோவை பெரியார் நூலகத்தில் அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகத்தின் 1,000 -க்கும் மேற்பட்ட போலி நூல்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலககங்களிலும் போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக நூலகத் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து போலி புத்தகங்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.