FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறப்பு புலனாய்வுக் குழு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

13 நவம்பர் 2026, 5:52 am
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் வீரமணிக்கு எதிராக 9 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கை மூடி மறைத்ததில் காவல் துறை உயா் அதிகாரிகளின் தொடா்பு இருப்பதாலும், பணம் கைமாறி இருப்பதாலும், இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், வழக்கு தொடா்பான விடியோக்கள் ஊடகங்களில் வெளியானது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, துளிா் அமைப்பு சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு வழக்குகளில் 10 நாள்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும். குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான பிரகாஷ் தலைமறைவாக உள்ளாா். அவரது முன்பிணை கோரிய மனு நவ.16-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பணப் பரிமாற்றம் தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த வழக்கின் தீவிரத் தன்மை கருதி, சிறப்பு புலன் விசாரணைக்கு தரப்பில் ஆஜராக 3 சிறப்பு அரசு வழக்குரைஞா்களை நியமித்து கடந்த நவ. 6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்குகளின் விசாரணையை நவ. 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.