FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் கோட்டைவிடும் தவெக அரசு’ - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தவெக அரசு கோட்டை விடுவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தவெக அரசு கோட்டை விடுவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் அரசு தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் பல தொழிற் கொள்கைகளை வகுத்தது.

பல நாடுகளில் நடத்தப்பட்ட பொருட்காட்சி அரங்கங்களில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு, தமிழ் நாட்டின் புதிய தொழிற் கொள்கைகள் விரிவாக அனைத்துத் தொழில் முதலீட்டாளர்களுக்கும் விளக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்கள். தொடர்ந்து, ஜெயலலிதாவின் அரசு 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தமிழ் நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் விதமாக, “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை சட்டப் பேரவையில் நான் அறிவித்தேன்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபை போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தோம். உலகமே முடங்கி இருந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், 2020 மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு தொழில் முனைவோரை அழைத்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த முதன்மை மாநிலமாகத் தமிழ் நாடு திகழ்ந்தது. (சுமார் ரூ. 61 ஆயிரம் கோடி) எனது தலைமையிலான ஜெயலலிதாவின் கொள்கை, 2019-ஐ உருவாக்கியது. அரசு, மின்சார வாகனக் வாகனங்கள் அறிமுகப்படுத்திய மின்சார வாகனக் கொள்கை 2019-2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசும் கடைபிடித்தது.

இன்று, ரூ. 4 ஆயிரம் கோடி மூலதனத்தில் Carbon Cosmos என்ற தென்கொரிய நிறுவனம், தனது மின் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அண்டை மாநிலமான ஆந்திரத்தில், தமிழ் நாட்டின் எல்லைக்கு அருகில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

2026-ல் ஆட்சிக்கு வந்த வாடகைக் கால் கூட்டணி த.வெ.க. அரசின் முதல்வர் விஜய்யின் ஆட்சியில், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்வதின் தொடர்ச்சியாக, அதாவது இரண்டு வாரத்திற்கு முன் Hwashin (ரூ. 850 கோடி), Seoyon (ரூ. 514 கோடி), Iwamet (ரூ. 250 கோடி) இழந்துள்ள நிலையில், மின் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தென் கொரியாவின் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீட்டையும் இந்த அரசு கோட்டைவிட்டுள்ள நிகழ்வு, படித்து வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.

இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில், வாடகைக் கால் கூட்டணி அரசின் தொழில் துறை அமைச்சர் "21 நாள்களில் ஒப்புதல் வழங்கும் திட்டமும், தமிழ் நாடு (Tamil Nadu Investment Promotion Commission) பெரு முதலீடு (Large Investment) மற்றும் மூலோபாய முதலீடுகளை துறைதோறும் ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்யும்” என்று தெரிவித்ததாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையில், முதலீடுகளை ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களில் விரைவாக அனுமதி அளிக்கும் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.

ஏற்கெனவே, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதை பழக்கம் இவைளில் இந்த ஆட்சி கோட்டை விட்டதுபோல், தமிழ் நாட்டிற்கு வரும் முதலீடுகளையும் தொடர்ச்சியாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாதனத்தைக் காட்டுவதுடன், தமிழ் நாட்டில் தொழில் வளத்தையும், படித்த இளைஞர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கியதுதான் 6 மாத கால விஜய்யின் தலைமையிலான த.வெ.க. அரசின் சாதனை. தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் வாடகைக் கால் கூட்டணி கட்சிகளும் இதுகுறித்து அரசுக்கு அறிவுறுத்தல் வழங்காமல் மவுனியாக இருப்பது ஏன்?” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the TVK government for failing to attract industrial investment to Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.