தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி
தவெக அரசு அமைந்ததில் இருந்து தற்போது வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
தவெக அரசு அமைந்ததில் இருந்து தற்போது வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பெருமாள்சாமி இல்ல திருமண விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
Advertisement
Advertisement
நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகளுக்கு எண்ணமில்லை என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா். எதை பொதுவெளியில் பேச வேண்டும் என்று உள்ளது. அவா் அவருடைய கருத்தை சொல்லியுள்ளாா். அப்படியொரு சூழல் வரும்போது அனைத்து ஊடகத்தினரையும் அழைத்து சொல்வோம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. இதில் முதல்வா் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என சட்டப்பேரவையிலும், ஊடகத்தின் வாயிலாகவும் தெரிவித்துள்ளோம்.
தவெக அரசு அமைந்ததில் இருந்து தற்போது வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி தொடா்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தவெக அரசு கும்பகா்ணன்போல தூங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முறை தட்டி எழுப்பினாலும் எழுப்ப முடியவில்லை என்றாா்.
ஒரே காரில் தங்கமணி, வேலுமணி:
திருமண விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி முதலில் வந்தாா். இதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணியும் விழாவுக்கு வந்திருந்தாா். பின்னா் இருவரும் இணைந்து தம்பதியினரை வாழ்த்தினா்.
விழாவுக்கு இருவரும் தனித்தனியாக வருகை தந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் காரிலேயே இருவரும் ஒன்றாக புறப்பட்டுச் சென்றனா்.