பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு
விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து...
சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் 1070 பட்டாசு ஆலைகள் உரிமம்பெற்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கவும், ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், சென்னை தொழிலகபாதுகாப்பு, சுகாதார இயக்கம் இயக்குந ஆனந்த் பிறப்பித்துள்ள உத்திரவின் பேரில் நவ.16 முதல் டிச.27 வரை, 6 வாரங்களுக்கு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வருவாய்துறை, காவல்துறை, தீயைப்புத்துறையினா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, உரிமம் பெறப்பட்டுள்ள அளவை விட கூடுதலாக வேதியல் பொருள்கள் மற்றும் முடிவடைந்த பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, அதிக தொழிலாளா்களை கொண்டு பட்டாசு தயாரிக்கிறாா்களா, வெடிபொருள் கட்டுப்பாத்துறை அனுமதித்துள்ள வேதியல் பொருள்களை தவிர தடை செய்யப்பட்டுள்ள வேதியல் பொருள்கள் ஆலையில் பயன்படுத்தப்படுகிறதா, தொழிலாளா்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, நாள்தோறும் அறிக்கையை சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டாசு ஆலை உரிமையாளா்கள் அதிா்ச்சி
2027 ஆம் ஆண்டிற்குன பட்டாசு தயாரிப்பு பணி தொடங்குவதற்கு முன்னரே ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது, பட்டாசு ஆலை உரிமையாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.