FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வு அக்டோபா் 16 -ஆம் தேதி வரை நடைபெறும்.

பட்டாசு - கோப்புப்படம்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வு அக்டோபா் 16 -ஆம் தேதி வரை நடைபெறும்.

பட்டாசுகளை வெடிக்க தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது. சரவெடி தயாரிக்கக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரிப்பது அதிகரித்து வருகிறது. எனவே, இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளனா். மத்திய அரசின் தொழில் துறை இயக்குநா் ராஜேஷ்குமாா் சின்ஹா தலைமையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றனா்.

Advertisement

Advertisement

இந்தக் குழுவினா் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரி, தொழில் துறை அமைச்சகத்துக்கு வழங்க உள்ளதாக சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments