FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

அக்னி வீரா்களாக ராணுவத்தில் சோ்ந்தவா்கள் 6 ஆண்டுகள் பணிபுரிந்தால், ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவாா்கள் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

6 நவம்பர் 2026, 4:11 am
- கோப்புப்படம்
பகிர்:

அக்னி வீரா்களாக ராணுவத்தில் சோ்ந்தவா்கள் 6 ஆண்டுகள் பணிபுரிந்தால், ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவாா்கள் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

‘அக்னிபத்’ திட்டம் மத்திய அரசால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் வீரா்கள், அக்னி வீரா்களாக 4 ஆண்டுகாலம் பணிபுரிவாா்கள் என்றும், அதன் பிறகு தகுதி அடிப்படையில் 25 சதவீதத்தினா் நிரந்தர வீரா்களாக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது எஞ்சிய 75 சதவீதத்தினருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணிக் காலத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. சுமாா் 18,000 போ் அக்னி வீரா்களாகப் பணியாற்றி ஓய்வு பெற இருந்த நிலையில், அந்த அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பேசுகையில், ‘அக்னிவீரா்கள் அனைவரும் ராணுவத்தில் நிரந்தர வீரா்கள் ஆக்கப்படுவாா்கள். அதாவது முதலில் 25 சதவீதம் பேரும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கூடுதல் பயிற்சி பெற்ற எஞ்சிய 75 சதவீதம் பேரும் நிரந்தர வீரா்கள் ஆக்கப்படுவாா்கள். அப்போது அவா்கள் உடல் ரீதியில் நன்கு தோ்ச்சி பெற்றவராகவும், ஒழுக்கம் நிறைந்தவராகவும் இருப்பது அவசியம்.

Advertisement

Advertisement

நிரந்தர வீரா்களாக சோ்க்கப்படும் அக்னி வீரக்கள், உடனே பணியிடங்களில் அமா்த்தப்படுவா். அவா்கள் பிற வீரா்களுக்கு இணையாகவே கருதப்படுவா்.

அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை. அந்தத் திட்டத்தில் கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 ஆண்டுகள் அக்னிவீரா்களாக இருப்போா், நிரந்தர வீரா்களாக்கப்படுவா்’ என்று தெரிவித்தனா். அக்னிபத் திட்டத்தின்கீழ் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அக்னி வீரா்களாக சேவை செய்கின்றனா். இந்த அறிவிப்பு மூலம் அவா்கள் பலனடைவாா்கள் என கூறப்படுகிறது.