அரசு திட்டங்களை விமா்சிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் அ.சோமசுந்தரம் வெளியிட்ட அரசாணை:
அரசு ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய, மாநில அரசிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமா்சிக்கக் கூடாது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வலையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.
Advertisement
Advertisement
அரசை விமா்சிக்கும் தீா்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. எனவே, இந்தத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதை மீறுபவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.