FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்க வேண்டும்– சீமான் வலியுறுத்தல்!

ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருப்பது பற்றி...

40 வினாடிகள் முன்பு
சீமான் - கோப்புப்படம்
பகிர்:

ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆர்மீனிய அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கதுரை நடராஜனை தாயகம் மீட்டுவர இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரை நடராஜன் ஆர்மீனிய அரசால் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆர்மீனிய அரசு மேற்கொண்டுள்ள இக்கைது நடவடிக்கை குறித்து முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக வேலை வாய்ப்பு தேடி சென்ற தங்கதுரை நடராஜன் ஆர்மீனிய அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறியாது, குறிப்பிட்ட இடத்தை விளையாட்டாக எடுத்த ஒரு புகைப்படத்திற்காக இத்தகைய கடுமையான குற்றம் சுமத்தப்பட்டு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெருங்கொடுமையாகும். தங்கதுரை நடராஜன் மீதான குற்றச்சாட்டுகள் என்ன, அதன் மீதான உண்மைத்தன்மை என்ன, அவருக்கு எத்தகைய சட்ட உதவிகள் செய்வது என்பது குறித்து எவ்வித அக்கறையுமின்றி அலட்சியமாகச் செயல்படும் தவெக அரசு, அவரைத் தாயகம் மீட்டுக் கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்துக்குரியது. நாட்டின் குடிமகன் ஒருவர் அயல்நாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமையாகும்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தங்கதுரை நடராஜனை விடுவிக்கத் தேவையான சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வழக்கு விசாரணை நிலை குறித்த தகவல்களை அவருடைய குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

summary

Naam Tamilar Katchi Chief Coordinator Seeman has urged that action be taken to rescue the youth from Tamil Nadu who has been arrested by the Armenian government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.