FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

7 மாவட்டங்களில் பிற்பகல் ஒருமணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருப்பது பற்றி...

15 நவம்பர் 2026, 12:00 pm
மழை - Dinamani
பகிர்:

தமிழ்நாட்டில் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பிற்பகல் ஒருமணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களின் சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று (நவம்பர் 15) காலை 5.30 மணி நிலவரப்படி, இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 9.0° வடக்கு அட்சரேகை மற்றும் 86.9° கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ளது.

இது அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேர் பகுதியில் இருந்து சுமார் 700 கி.மீ. மேற்கு-தென்மேற்கிலும், சென்னையில் இருந்து சுமார் 860 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 1,040 கி.மீ. தெற்கு-தென்கிழக்கிலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து 1,160 கி.மீ. தெற்கு-தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது.

புயலாக வலுப்பெற வாய்ப்பு!

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்தடுத்த நாட்களில் வங்கக்கடல் பகுதியில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Centre has announced that there is a chance of rain until 1 PM in 7 districts of Tamil Nadu, including Cuddalore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.