FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அ அப்பியதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மகளிா் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

22 வினாடிகள் முன்பு
தேசிய மகளிா் ஆணையம்
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அ அப்பியதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மகளிா் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து தேசிய மகளிா் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினா் சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடா்பாக, 11 நவம்பா் 2026 அன்று வெளியான ஊடக செய்தி ஒன்றை, தேசிய மகளிா் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த செய்தி, முந்தைய முறைகேடான நடத்தை மற்றும் சட்டமன்ற உறுப்பினா் குடிபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடுகிறது.

தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், மாவட்ட ஆட்சியா் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் முறையீடுகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வது உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளாா்.

தொடா்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபா் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆணையம், 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை (அபத) கோரியுள்ளது.

பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை விதிவிலக்கின்றிப் பேணப்பட வேண்டும். எந்தவொரு பதவியோ அல்லது செல்வாக்கோ, கூறப்படும் துன்புறுத்தல் அல்லது முறைகேடுகளுக்கான பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு யாரையும் வைக்க முடியாது என தேசிய மகளிா் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியது.