FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எதிர்வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக அணியே வெல்லும்- வைகோ!

தமிழகத்தில் எதிர்வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக அணியே வெற்றி பெறும் என வைகோ தெரிவித்திருப்பது பற்றி...

15 நவம்பர் 2026, 1:03 pm
வைகோ.
பகிர்:

தமிழகத்தில் எதிர்வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக தலைமையிலான அணியே வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டு அணை கட்டும் முயற்சி நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement

Advertisement

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 17-ஆம் தேதி தென்காசியில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையை ஏவிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கிய முதல்வர் விஜய்யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

நூலகத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. புத்தகங்களின் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லாத போலியான புத்தகங்களுக்கு அனுமதி அளித்து முறைகேடு நடந்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் போலியான புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 34 ஆண்டுகளில் பல்வேறு ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள், கொலைகள், காவல் மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். ஊழல், கமிஷன் முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தற்போதைய தமிழக ஆட்சி திட்டமிட்ட காலம் வரை தொடரும். எதிர்காலத்திலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரும். வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மதிமுக மாநில வழக்கறிஞர்கள் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற உள்ளது என்றார்.

summary

Vaiko has stated that the TVK-led alliance will win all the upcoming by-elections in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.