FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தேர்தல் வெற்றி விஜய் அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்: வைகோ

இடைத்தேர்தலில் தவெக பெற்ற வெற்றி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று வைகோ பேசியிருப்பது குறித்து...

10 அக்டோபர் 2026, 2:21 pm IST
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ. உடன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தவெக பெற்ற வெற்றி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இலங்கையின் உள்நாட்டுப் போரிலும் உயிர்நீத்த தியாகிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் அளித்த அங்கீகாரம்

Advertisement

Advertisement

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பேசிய வைகோ, தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம். பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வென்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் பணம் கொடுக்கப்படவில்லை. மற்ற கட்சிகள் பணம் கொடுத்தும் தோல்வியடைந்து இருக்கிறார்கள். தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என்று உறுதியாக இருப்பது தான் இந்த வெற்றி ஆகும்.

திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என்று விமர்சித்த வைகோ, விஜய் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான விமரிசனங்களையும் மக்கள் புறந்தள்ளியுள்ளதாகத் தெரிவித்தார்.

தவெக அரசுக்கு கிடைத்த அங்கீகாரம்

தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுகளுக்கு இடமில்லை என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டார். தவெக அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றி பெறும்.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது

எஸ்ஐஆர் அதிகாரம் முடக்கம் வகையில் பாஜக மத்திய அரசு செயல்படுகிறது. எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது மாட்டார்கள். நாளை மோடி சென்னை வருகிறார், அவர் வரட்டும் வந்துட்டு போகட்டும். நரேந்திர மோடியுடன், மதிமுக எந்த காலத்திலும் ஒட்டும் உருவும் இருக்காது என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் கிட்டத்தட்ட 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்

மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்குப் பதிலாக 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்று துரை வைகோ தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி, மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி சார்பில் வரும் 13 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் மதிமுக மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஞானேஷ்குமார் கேரள மாநிலத்தில் பணியாற்றிய காலத்திலும் அவரது செயல்பாடுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகக் குற்றம்சாட்டினார். எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைகள் இருப்பது உண்மைதான் என்றும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்போது பாதிப்புகள் குறைவாகவே இருந்ததாகவும் துரை வைகோ தெரிவித்தார்.

By-election victory is the people's endorsement of the Vijay government: Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments