FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்!

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், 4 நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

16 நவம்பர் 2026, 11:46 am
முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் - கோப்புப்படம்.
பகிர்:

தனியார் பள்ளிகள் அங்கீகார மோசடி வழக்கில் சரண்டைந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், 4 நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 400 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இரண்டாவது எதிரியான முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில், அக்டோபர் 29 ஆம் தேதி சரணடைந்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, நாள்கள் 4 காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

4 நாள் போலீஸ் காவல் முடிந்து முத்துக்குமார், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு திங்கள்கிழமை ஆஜரபடுத்தப்பட்டார். அப்போது அவரிடம், விசாரணையின் போது உணவு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டனவா? துன்புறுத்தினார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முத்துக்குமார், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டதாகவும், துன்புறத்தவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து, முத்துக்குமாரை நவம்பர் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

summary

The Chennai Special Court for Prevention of Corruption Act cases has ordered the re-imprisonment of former MLA Muthukumar after his 4-day police custody ended in the private school recognition scam case, in which he had earlier surrendered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.