FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைப்பதற்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைப்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை என்று சுரேஷ் கோபி கூறியிருப்பது....

44 வினாடிகள் முன்பு
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி - X | Suressh Gopi
பகிர்:

சென்னை: கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.42 ஆயிரம் கோடி இழைப்பைச் சந்துள்ள நிலையில்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, பெட்ரோல் மீதான மாநில வரி விகிதங்களைக் குறைப்பது அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது. மேலும், எரிபொருள் விலையைக் குறைக்கும் முன், எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

Advertisement

Advertisement

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலைக் குறிப்பிட்டுப் பேசிய சுரேஷ் கோபி, "பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று நாம் விரும்பலாம். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 42,000 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

எரிபொருள் விலையைக் குறைப்பதில் உள்ள சவால்களை விளக்கிய அவர், விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கு முன்னதாக எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்துள்ள இழப்புகளைச் சரிசெய்த பின்னரே விலை குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்வு குறித்துக் கருத்து தெரிவித்த சுரேஷ் கோபி, கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் விலைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பெட்ரோலியப் பொருள்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை ஒப்புக்கொண்ட அமைச்சர், இந்தச் சூழலைச் சரிசெய்யவும், விநியோகச் இடையூறுகளைத் தீர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, நவ. 8 ஆம் தேதி கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், எத்தனால் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். போதுமான கொள்முதலை உறுதி செய்யாமல், அதிக உற்பத்தியை ஊக்குவித்ததாக மத்திய அரசு மீது அவர் குற்றம் சாட்டியதுடன், எத்தனால் கலவையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பதால், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், பாஜக தலைமையிலான மத்திய அரசு, போதிய திட்டமிடல் இன்றி எத்தனால் கலப்பு இலக்குகளை அறிவித்ததாகவும், தற்போது உற்பத்தி செய்யப்படும் எத்தனால் அளவில் 20-30 சதவீதத்தைக் கூட கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார்.

முன்பு எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்திய பாஜக தலைமையிலான மத்திய அரசு, தற்போது உற்பத்தி செய்யப்படும் அளவில் 20-30 சதவீதத்தைக் கூட கொள்முதல் செய்ய மறுக்கிறது.

இந்தச் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ராகுல் காந்தி மற்றும் அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை உள்ளது. எத்தனால் துறையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு, மத்திய அரசின் தவறுகளே காரணம் என்று அவர் கூறினார்.

Union Minister Suresh Gopi said an immediate reduction in petrol and diesel prices was not technically possible, citing losses of Rs 42,000 crore incurred by oil companies and "chaos" in the supply of petroleum products.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.