அன்பில் மகேஷின் ஜாமீன் மனு! விசாரணை நவ. 24-க்கு ஒத்திவைப்பு!
அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவின் மீதான விசாரணை ஒத்திவைத்துள்ளதைப் பற்றி...
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவின் மீதான விசாரணை நவ. 24-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கில் கடந்த அக். 6 ஆம் தேதி திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
அன்பில் மகேஷ் நவ.6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியகுமார், இந்தக் குற்றத்தில் அன்பில் மகேஸை தொடர்பு படுத்துவதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அவருக்கு பிணை வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது பதிலளிக்க முன்னதாக நவ. 17 வரை ஒத்திவைத்த நிலையில், தற்போது நவம்பர் 24 வரை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.