FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

போக்ஸோ வழக்கில் வீரமணிக்கு குற்றப்பத்திரிகை: குற்றச்சாட்டு பதிவுக்காக நவ. 20-க்கு வழக்கு ஒத்திவைப்பு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் ஜெம் வீரமணிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

17 நவம்பர் 2026, 10:06 pm
வீரமணி - கோப்புப் படம்
பகிர்:

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் ஜெம் வீரமணிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதுவரை வீரமணிக்கு எதிராக 9 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில், வீரமணி மற்றும் அவரது காா் ஓட்டுநா்களான பாபு, பாா்த்திபன் ஆகிய மூவருக்கு எதிராக சுமாா் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தக் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்குவதற்காக, வீரமணி உள்ளிட்டோரை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் வீரமணி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

இதையடுத்து, மூவருக்கும் முதல் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவ. 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.