ரூ.2.46 கோடியில் நவீனப்படுத்தப்படும் முதல்வரின் காணொலி அறை
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையில் அமைந்துள்ள முதல்வரின் காணொலி அறை ரூ.2.46 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையில் அமைந்துள்ள முதல்வரின் காணொலி அறை ரூ.2.46 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 4-ஆவது தளத்தில் முதல்வரின் காணொலி அறை உள்ளது. இந்த அறையிலிருந்து மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வா் காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறாா். முக்கிய முடிவுகளைப் பிறப்பிக்கும் இடமாகவும் இந்த அறை உள்ளது. இந்த அறையை ரூ.2.46 கோடியில் முழுமையாக நவீனமயப்படுத்தும் வகையில் பொதுப்பணித் துறை ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இந்த அறையில் புதிய அதிநவீன கேமரா, பெரிய அளவிலான எல்இடி திரை, சத்தம் எதிரொலிக்காத அமைப்பு, நவீன ஒளி வசதி, ஒலிபெருக்கி, அதிவேக இணையதள வசதி, தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை இணைக்கும் வகையில் நவீன தொலைபேசி அமைப்பு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், முதல்வரின் காணொலி அறைக்கு அருகில் உள்ள 2 அறைகள், அதிகாரிகள் காத்திருப்பு அறை, கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றையும் நவீனப்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.