தலைமைச் செயலகத்தில் மின்தடை: மின்சார வாரியம் விளக்கம்!
தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது தொடர்பாக...
தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடை தமிழ்நாடு குறித்து மின்சார வாரியம் திங்கள்கிழமை (அக். 12) விளக்கமளித்துள்ளது.
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மை வளாகத்தில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சர்களின் அலுவலகங்களும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்ததாவது:
Advertisement
Advertisement
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று காலை மின்விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது.
மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன.
முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின்சுவிட்சுகளில், ஒரு சுவிட்ச்-சின் பி-பேஸ் (B-Phase) மின்விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து, மின்விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.
இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
The Electricity Board issued a clarification on Monday (Oct. 12) regarding the power outage at the Secretariat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.