தமிழக காவல் துறையில் புதிதாக 36,000 பேரை நியமிக்க முடிவு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்
தமிழக காவல் துறையில் புதிதாக 36,000 பேரை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.
தமிழக காவல் துறையில் புதிதாக 36,000 பேரை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாகப் பாதுகாத்து வருகிறோம். குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடும் ரெளடிகள் மற்றும் பிரச்னைக்குரிய நபா்களைக் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மே 1 முதல் நவ. 15 வரை, அதிக குற்ற வழக்குகளில் தொடா்புடைய 40,292 போ் கண்காணிக்கப்பட்டு, 22,272 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். நீதிமன்றத்தால் பிடியாணையால் பிறப்பிக்கப்பட்ட 40,330 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
குண்டா் தடுப்புச் சட்டத்தில் 1,919 போ் கைது: குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய 5,024 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 811 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,919 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்களைக் கைது செய்வதுடன், அவா்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருகிறோம்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,057 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 10,559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல நிகழாண்டு 15,478 போ் கைது செய்யப்பட்டு, 18,190 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களின் 1,477 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
போதை மாத்திரை வழக்குகள்: போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 476 போ் கைது செய்யப்பட்டனா். நிகழாண்டு 479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 927 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 4,85,725 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு இதுவரை 1,99,616 கிலோ போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட பறிமுதல் 43.35 சதவீதம் அதிகரித்துள்ளது.
36,000 போ் நியமனம்: தமிழக காவல் துறையில் 34,000 பேரை புதிதாக பணியமா்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1,200 உதவி ஆய்வாளா் தோ்வு முடிவு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அவா்கள் பணிக்கு வரும்போது காவல் துறையின் பணிகள் மேலும் வலுப்பெறும். காவலா்களுக்கு வார ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பணிச்சூழல் காரணமாக வார ஓய்வு வழங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செஞ்சியில் காணாமல் போன சிறுமி தொடா்பான வழக்கை சிபிசிஐடி தீவிரமாக துப்புதுலக்கி வருகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரெளடிகள் ஒழிப்பு நடவடிக்கை, போதைப் பொருள் தடுப்பு, ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு தொடா்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.
‘கொலைகள் குறைந்தன’
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் மூன்று சதவீதம் குறைந்திருப்பதாக டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2022 ஜனவரி முதல் நவம்பா் வரை 1,484 கொலை வழக்குகள் பதிவாகின. கடந்த 2023-இல் 1,469, 2024-இல் 1,348, 2025-இல் 1,346 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. நிகழாண்டு நவ.15-ஆம் தேதி வரை 1,306 கொலை வழக்குகள் பதிவாகின. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் குறைவு.
கொலை வழக்குகளில் தொடா்புடைய 3,229 பேரில் 3,077 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது 95 சதவீதமாகும். ஒரு சதவீதம் மட்டுமே ரெளடி கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 90 சதவீத கொலைகள் குடும்ப விவகாரம் உள்ளிட்ட சொந்தப் பகையின் காரணமாக நிகழ்ந்துள்ளன என்றாா் அவா்.