FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் முன்பதிவு டிக்கெட் முடிந்தது பற்றி...

வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம்
பகிர்:

பொங்​கல் பண்​டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு டிக்கெட்கள் பெரும்பாலான ரயில்களில் சில நிமிஷங்களி​லேயே விற்றுத்தீர்ந்​தன.

அடுத்தாண்டு (2027) ஜன.15-ஆம் தேதி (வெள்​ளிக்​கிழமை) பொங்கல் பண்​டிகை கொண்​டாடப்​படவிருக்கிறது. ஜன. 14-ஆம் தேதி போகி, 16-ஆம் தேதி மாட்​டுப்​பொங்​கல், 17-ஆம் தேதி காணும் பொங்​கல் ஆகிய பண்​டிகைகளும் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன.

Advertisement

Advertisement

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்​களுக்குச் செல்ல வசதியாக ரயில்​களில் 60 நாள்​கள் முன்​னே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்வதற்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் நாளான ஜன. 17 ஆம் தேதிக்கான (ஞாயிற்றுக்கிழமை) ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.

ஜன. 18 திங்கள்கிழமை அன்று அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், பெரும்பாலானோர் ஜன. 17 அன்று சென்னை திரும்புவதற்கு திட்டமிட்டு இன்று காலை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

மதுரை, திருநெல்​வேலி, செங்​கோட்டை, கன்​னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்​துநகர் விரைவு ரயில்கள், கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சேரன், நீலகிரி, மங்களூரு உள்ளிட்ட விரைவு ரயில்கள் டிக்கெட்டுகளை அனைத்து சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன. பலரயில்களுக்கான முன்பதிவில் ரெக்ரெட் வந்ததால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், ஜன. 18 திங்கள்கிழமைக்கான முன்பதிவு நாளையும் (நவ. 19), ஜன. 19 செவ்வாய்க்கிழமைக்கான முன்பதிவு நாளை மறுநாளும் (நவ. 20) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

summary

Returning after Pongal! Train ticket bookings have closed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.