முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்
முதல்வர் விஜய் இதுவரை எதைப் பற்றி பேசியிருக்கிறார் புதிதாகக் கேட்பதற்கு என்று காவிரி குறித்து ஸ்டாலின் பதில்
காவிரி பிரச்னை குறித்து முதல்வர் விஜய்க்குத் தெரியாததால், அவர் மௌனமாக இருக்கிறார். இதுவரை எதைப் பற்றி பேசியிருக்கிறார்? இப்போது புதிதாகக் கேட்கிறீர்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
Advertisement
Advertisement
காவிரி விவகாரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு நீங்கள் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். ஆனால், அது பற்றி முதல்வர் விஜய் இதுவரை எதுவும் கூறாமல் இருப்பது பற்றி என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு,
இது பற்றி நீங்கள்தான் அவரைக் கேட்க வேண்டும். கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் அமைதியாக இருக்கிறார் என்று ஸ்டாலின் பதில் கூறினார்.
அடுத்து கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்த போதும், தமிழக முதல்வர் விஜய் காவிரி விவகாரம் குறித்து பேசாதது ஏன் என்ற கேள்விக்கு, அவர் என்றுதான் பேசியிருக்கிறார்? எதைப் பற்றி பேசியிருக்கிறார். இன்று புதிதாகக் கேட்கிறீர்களே? நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.