FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் நவ. 23 முதல் மீண்டும் மழை தொடங்கும்!

தமிழ்நாட்டில் நவ. 23 முதல் மீண்டும் மழை தொடங்கும் என்று பிரதீப் ஜான் பதிவு...

மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் வருகின்ற நவ. 23 ஆம் தேதி முதல் அடுத்தக்கட்ட மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளரும் தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்வான் புயலாக வலுப்பெற்றது.

Advertisement

Advertisement

இது, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திசை மாறியுள்ள ‘அக்வான்’ தீவிர புயல், வரும் நவ. 20-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நரசாபுரம் முதல் ஒடிஸாவின் புரி வரை உள்ள கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, அக்வான் புயல் எதிரொலியால் தமிழ்நாட்டில் மழை பெய்யாது என்று தெரிவிக்கப்பட்டதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அடுத்தக்கட்ட மழை பொழிவு வருகின்ற நவ. 23 முதல் தொடங்கும் என்று பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த மழையானது, சென்னை, டெல்டா, தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

Next spell Rain to resume in Tamil Nadu from Nov 23!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.