வி.எஸ். பாபு மறைவு! எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்... ஆதவ் அர்ஜுனா இரங்கல்
வி.எஸ். பாபு மறைவு குறித்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் என்று கூறினார்.
தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரை இழந்துவிட்டோம் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவனைக்கு விரைந்து வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வி.எஸ். பாபு மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட அன்பைப் பெற்றவர், எங்கள் கடினமான காலங்களில் உடனிருந்தவர் வி.எஸ். பாபு. எங்கள் குடும்பத்தின் மூத்தவரை இழந்துவிட்டோம்.
சென்னையில், புதிய கட்சி வெற்றி பெற முடியுமா என்று எல்லோரும் கேட்டபோது, அவர் தலைவர் விஜய்யிடமே சொன்னார், சென்னை மக்கள் பல காலமாக கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக வடசென்னைக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. உங்கள் மூலமாக நல்லது நடக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு சொன்னவரை இன்று இழந்துவிட்டோம் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.