கல்குவாரி முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை
கல் குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்துவது குறித்து...
கல் குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி.
இவர் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், பி. மூர்த்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரை பி. மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரி டெண்டர் குறித்த முக்கிய ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.