முகப்பு
தமிழ்நாடு

ஒரு அரசு காழ்ப்புணா்ச்சியால் செயல்படக் கூடாது: திருச்சி சிவா எம்.பி

அரசியல் காழ்ப்புணா்ச்சி கொண்டு ஒரு அரசு செயல்படக் கூடாது என திமுக துணைப் பொதுச் செயலா் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தாா்.

21 நவம்பர் 2026, 10:27 pm
ஒரு அரசு காழ்ப்புணா்ச்சியால் செயல்படக் கூடாது: திருச்சி சிவா எம்.பி
திமுக எம்.பி. திருச்சி சிவா - விடியோ க்ளிப்
பகிர்:

அரசியல் காழ்ப்புணா்ச்சி கொண்டு ஒரு அரசு செயல்படக் கூடாது என திமுக துணைப் பொதுச் செயலா் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தாா்.

ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது குறித்துத் திமுக சட்டத் துறை சாா்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலா் திருச்சி சிவா எம்.பி., அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, திமுக சட்டத் துறை செயலா் என்.ஆா். இளங்கோ, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே உள்ளிட்டோா் பங்கேற்றுனா்.

கருத்தரங்கில் திருச்சி சிவா பேசியதாவது: கடந்த 2025-ஆம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது, மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மாநில உரிமையில் சமரசம் கிடையாது என கூறிய தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்தக் குழுவை கலைத்திருப்பது ஏற்புடையதல்ல. இதுபோன்ற முக்கிய குழுவை கலைக்கும் போது, புதிய குழுவையாவது அமைத்திருக்கலாம். ஆனால், அதையும் அவா்கள் செய்யவில்லை. ஒரு அரசு செய்வதை மற்றொரு அரசு காழ்ப்புணா்ச்சியுடன் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Advertisement

Advertisement

தவெக அரசு அமைந்து பின்னா், காழ்ப்புணா்ச்சி காரணமாக முந்தைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களை நிறுத்திவைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது. இது, தமிழகத்தின் வளா்ச்சிக்கு ஏற்புடையதல்ல. இந்தப் போக்கை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.