முகப்பு

நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?

முதல்வர் விஜய் திருச்சி செல்வது குறித்து...

13 வினாடிகள் முன்பு
நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி புத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடக்கி வைக்கவும் முதல்வர் விஜய் நவ. 23-ல் திருச்சி செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் சாலை வலம் மேற்கொள்ளவும் முதல்வா் விஜய், வெள்ளிக்கிழமை (நவ.20) திருச்சிக்கு செல்லவிருவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மேற்கொண்டு வந்தனா். வியாழக்கிழமை பிற்பகல் வரையில் பரபரப்பாக இருந்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் ஆய்வுசெய்து வந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், திருச்சியில் முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து, முதல்வரின் திருச்சி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருச்சியில் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் வருகிற திங்கள்கிழமையில் (நவ. 23) நடத்தப்படும் என்றும், முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

summary

CM Vijay to visit Trichy on Nov. 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.