முகப்பு

ஆயுள் தண்டனை கைதியைப் பார்க்க கஞ்சாவுடன் வந்த 3 வாலிபர்கள் கைது

பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவரைப் பார்க்க வந்தவர் வைத்திருந்த 18

25 வினாடிகள் முன்பு
ஆயுள் தண்டனை கைதியைப் பார்க்க  கஞ்சாவுடன் வந்த 3 வாலிபர்கள் கைது
கஞ்சாவுடன் ஆயுள் தண்டனை கைதியைப் பார்க்க வந்த 3 வாலிபர்கள் கைது - டிஎன்எஸ்
பகிர்:

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவரைப் பார்க்க வந்தவர் வைத்திருந்த 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த மூன்று பேரபையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதியான 'ஒன்றரை கௌதம்' என்ற கௌதம், பாதுகாப்பு கருதி சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபகாலமாக அவரைப் பார்க்க சிலர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய சிறையிலிருக்கும் கைதி கௌதமைப் பார்ப்பதற்காக கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த பிச்சைபாண்டி(27), ஜோஸ்வா தேவபிரியன்(25) மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கோபி (26) ஆகிய 3 வாலிபர்களும் நேற்று முன்தினம் சிறைக்கு வளாகத்துக்கு வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

அப்போது, பார்வையாளர் வளாகத்தில் காத்திருந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் ராமசந்திரராஜ் அவர்களை சோதனையிட்ட போது, ஜோஸ்வா தேவபிரியன் தனது மேல்சட்டை கை மடிப்பில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் முனியாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்திய பிறகு, சிறை கண்காணிப்பாளருக்குத் தகவல் அளித்தார்.

தொடர்ந்து, சிறை அலுவலர் முனியாண்டி மூவரையும் பெருமாள்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பெருமாள்புரம் போலீசார் ஜோஸ்வா தேவபிரியன் உள்ளிட்ட 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Three young men arrested for bringing ganja while visiting a life-convict prisoner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.