முகப்பு

பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை! வழக்கில் திடீர் திருப்பமாக மகள் கைது!

பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மகள் கைது

பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை! வழக்கில் திடீர் திருப்பமாக மகள் கைது!
தாய் கொலை - மகள் கைது
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் பகுயில், கீதா என்ற பெண் கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில, திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கீதா கொலையில், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறைக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. காரணம், கீதாவின் மகள் சரண்யாவே இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்ததும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகள் சரண்யா, திருமணமாகி, விவாகரத்தானவர். பள்ளி ஆசிரிசையாக பணியாற்றி வரும் சரண்யா, தாய் கீதாவுடன் வசித்து வந்துள்ளார். வருவாயை மீறி செலவு செய்து வந்த சரண்யாவுக்கும் கீதாவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும் வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில்தான், தாய் கீதா கொலையில் சரண்யா கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, கீதாவிடம் பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்ததால், கயிற்றால் கீதாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சரண்யா பள்ளிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்.

பிறகு, கீதா கொலை செய்யப்பட்டது குறித்து மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, வீட்டுக்கு வந்த சரண்யா, தாய் கொலை செய்யப்பட்டது குறித்து எந்த அதிர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்தது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சந்தேகத்தின்பேரில், சரண்யாவிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில், அவரே கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.