ஆயுஷ் படிப்புகள்: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
ஆயுஷ் படிப்புகள்: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை ஆயுஷ் இடங்களுக்கு (சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.23) நிறைவடைகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட அறிவிப்பு:
ஆயுஷ் மருத்துவத்தின் இளநிலைப் படிப்புகளான பிஎன்ஒய்எஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் ஆகியவற்றுக்கு 3 சுற்று கலந்தாய்வும், ஒரு சிறப்புக் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவில் நூற்றுக்கணக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், நிா்வாக இடங்களும் காலியாக உள்ளன.
Advertisement
Advertisement
அந்த இடங்களில் சேர விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு இடங்கள், அகில இந்திய இடங்கள், நிா்வாக இடங்களுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். திங்கள்கிழமை (நவ.23) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.