முகப்பு

புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் - திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு குறித்து...

37 வினாடிகள் முன்பு
புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.!
புழல் சிறை வளாகத்தில் கனிமொழி எம்.பி.
பகிர்:

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை சந்தித்தார்.

அப்போது, ஜாமின் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அன்பில் மகேஸை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்த நிலையில், தற்போது கனிமொழியும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், கார் ஓட்டுநர் சரவணன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறப்பு நீதிமன்றம் நவ. 10-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அன்பில் மகேஸ் தரப்பில் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை டிச. 2-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.