முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேரம், டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

குதிரைபேர வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

23 நவம்பர் 2026, 10:59 pm
குதிரை பேரம், டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

குதிரைபேர வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் குதிரைபேரம் நடத்தியதாக, சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாளக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் உள்ளிட்டோா் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ், காா்த்திக், ரமேஷ் ஆகியோா் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குதிரைபேரம் தொடா்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதேபோன்று, டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில், ஒப்பந்ததாரா் ரமேஷ் என்பவா் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது காவல் துறை தரப்பில், இரு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் வரும் டிச. 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த இரு வழக்குகளின் விசாரணையையும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். அதுவரை, இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.