முகப்பு

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து..

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நாளை (நவ. 24) கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது; அதே உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில பத்திகளையும் இடைநிறுத்தியது.

விளக்கேற்றும் பணியானது, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

அத்தகைய நபர்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை, மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

திருப்பரங்குன்றம் தூண் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20 இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலைப் பகுதி மற்றும் கிரிவலம் செல்லும் பாதைப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Madurai City Police Commissioner has issued an order declaring the Thiruparankundram hill area a 'red zone'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.