FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா: போலீசார் குவிப்பு

திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், வேல் எடுக்கும் விழாவின்போது கதம்ப சாதம் சமைப்பது குறித்து...

9 அக்டோபர் 2026, 2:08 pm IST
திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா - டிஎன்எஸ்
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், வேல் எடுக்கும் விழாவின்போது கதம்ப சாதம் சமைப்பது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தொல்லியல் துறை சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அதில் மலை மீது யாரும் தீ எரிப்பது அது சம்பந்தமாக பொருள்கள் மற்றும் மலை மீது வைத்து சமையல் செய்ய அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த தகவல் திருப்பரங்குன்றம் பகுதியில் பரவிய நிலையில், மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதோடு. சமையல் செய்ய காய்கறிகளை தயார் செய்வதற்காக மலைக்கு சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் திருப்பரங்குன்றம் கிராம மக்களுக்கிடையே பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பு குவியத் தொடங்கிய கிராம மக்கள், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து கோயில் துணை ஆணையர் மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.

தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி, திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோயில் துணை ஆணையர் அலுவலகத்தில் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். வியாழக்கிழமை நள்ளிரவை கடந்தும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் மலைமீது சமைத்துக் கொள்ளலாம் என தொல்லியல் துறை அனுமதி வழங்கியதாக கோவிலில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து கலைந்து சென்றனர்.

திருப்பரங்குன்றம் மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையால் பதட்டமான சூழல் நிலவுவதால் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Vel festival atop Thiruparankundram Hill today: Police deployed in large numbers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments