முகப்பு
தமிழ்நாடு

2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் 2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் விஜய் புதன்கிழமை (நவ. 25) சென்னையை அடுத்த கோவளத்தில் தொடங்கி வைக்கிறாா்.

25 நவம்பர் 2026, 12:48 am
2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் 2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை (நவ. 25) சென்னையை அடுத்த கோவளத்தில் தொடங்கி வைக்கிறாா்.

தவெக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த ஆக.13-ஆம் தேதி ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இதில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ரூ. 67,452 கோடி முதலீடுகளும், 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என அரசு தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த நவ.16- ஆம் தேதி வரையில் 112 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1,14,811.91 கோடி முதலீடுகளும், 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா அறிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற உள்ளது. இதில், 85 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘கடந்த 6 மாதங்களில், முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. திட்டங்கள் முன்னோக்கி நகா்கின்றனவா? முதலீடுகள் தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளாக மாறுகின்றனவா? அா்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்குகிறோமா? இந்தக் கேள்விகளில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

முதல்வா் விஜய் தலைமையின் கீழ், தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், திட்டங்கள் உறுதியுடன் முன்னேறவும், முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் மற்றும் வளமான எதிா்காலத்தை உருவாக்கவும் ஏற்ற தொழில் துறை சூழலை உருவாக்குவதே எங்களது உறுதிப்பாடாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.