முகப்பு

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்!

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது பற்றி...

48 வினாடிகள் முன்பு
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்!
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DIN
பகிர்:

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாக்க கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், பி.டி. அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா், காா் ஓட்டுநா் சரவணன் உள்ளிட்டோா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பிணை கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே மீண்டும் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது காவல்துறை. இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் டிச. 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Anbil Mahesh appears in a special court in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.