முகப்பு

செம்மண் முறைகேடு: பொன்முடி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!

செம்மண் முறைகேடு வழக்கில் பொன்முடி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு...

28 வினாடிகள் முன்பு

செம்மண் முறைகேடு: பொன்முடி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!
முன்னாள் அமைச்சர் பொன்முடி - ENS
பகிர்:

செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க. பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தது.

பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட குற்றப்பிரிவு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 166 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனுவை, விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

summary

Red soil scam: Appeal filed against Ponmudi acquittal in Madras HC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.