முகப்பு

வானிலை! அடுத்த 3 மணிநேரம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி...

40 வினாடிகள் முன்பு
வானிலை! அடுத்த 3 மணிநேரம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை!
மழை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலிலிருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திர மாநிலம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன்காரணமாக வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், மாலை முதல் கனமழை பெய்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் காலை 10 மணிக்கு வெளியிட்டது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் இன்று பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Weather update! Rain expected in 4 districts, including Chennai, over the next 3 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.