முகப்பு

தொட்டதுக்கெல்லாம் கைதா? தவெக எம்எல்ஏவை கைது செய்யத் தேவையில்லை! கார்த்தி சிதம்பரம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து பற்றி...

43 வினாடிகள் முன்பு
தொட்டதுக்கெல்லாம் கைதா? தவெக எம்எல்ஏவை கைது செய்யத் தேவையில்லை! கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம். - கோப்புப் படம்
பகிர்:

அனைத்து விவகாரத்திலும் கைது நடவடிக்கை என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என தவெக எம்எல்ஏ குறித்த கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"எல்லோரையும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தொட்டதுக்கெல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

Advertisement

Advertisement

நம் நீதித்துறையில் தேவையில்லாமல் கைது நடவடிக்கை நடக்கிறது. ஒருவர் இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள், சாட்சியைக் கலைப்பார்கள் என்றால் மட்டுமே கைது செய்ய வேண்டும். அவர் வெளியே இருப்பதால் ஒருவரின் உயிருக்கு, உடைமைக்கோ ஆபத்து இல்லை என்று காவல்துறை நினைத்தால் அவரைக் கைது செய்ய வேண்டாம்.

அனைத்து வழக்கிலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று.

75% வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரலாம்" என்று கூறினார்.

summary

Congress MP Karti chidambaram on kallakurichi MLA issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.